Thursday 21 June 2012



நான் பெண் இல்லையா...அழகிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட கனடா திருநங்கை போர்க்கொடி!

புதன்கிழமை, ஏப்ரல் 4, 2012, 11:40 [IST]



 Transgendered Woman Makes Plea Donald Trump Aid0091
Fashion show

Ads by Google
16 GB Pen Drive @ 466 tradus.in/16GB-Pen-Drive-466
Sandisk 16GB at 63% Off. Free Shipping. Buy Now!
நான் ஒரு பெண் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே என்னை மிஸ் கனடாப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கனடாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

அந்த அழகியின் பெயர் ஜென்னா தலக்கோவா. இவர் மிஸ் கனடா போட்டியின் இறுதிச் சுற்று வரை வந்தார். ஆனால் அதற்கு மேல் இவரை அனுமதிக்க முடியாது என்று போட்டியை நடத்தும் டொனால்ட் டிரம்ப் அமைப்பு கூறி விட்டது. அவர் ஆணாக இருந்து அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர். இயற்கையான பெண் இல்லை. எனவே அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் கூறி விட்டது.

இதனால் கொதிப்படைந்துள்ளார் ஜென்னா. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பாஸ்போர்ட்டைப் பாருங்கள். என்ன போட்டுள்ளது, பெண் என்றுதானே போட்டிருக்கிறார்கள். பிறகு எப்படி நான் ஆணாக முடியும்.

என்னை தொடர்ந்து போட்டியில் அனுமதிக்க முடியுமா, முடியாதா என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும். இதில் நான் வெற்றி பெற்றால் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும் என்றார்.

வான்கூவரைச் சேர்ந்த 23 வயதான ஜென்னா, 19 வயதாக இருக்கும்போது பாலின அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் ஆவார். ஆனால் தான் ஒரு பெண்ணாக பல பிரச்சினைகளை இந்த சமுதாயத்தில் அனுபவித்து விட்டதாக வேதனையுடன் கூறினார்.

ஜென்னாவின் வ்ககீல் குளோரியா அல்லர்ட் கூறுகையில், ஜென்னா ஒரு அற்புதமான, அழகான பெண். அவரை போட்டியில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

அவரது பாலினம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி இருக்கையில் எப்படி டிரம்ப் இப்படி நடந்து கொள்ளலாம்?.

ஜென்னாவை போட்டியில் பங்கேற்க அனுமதிப்பதோடு, இயற்கையாகவே பெண்ணாக பிறந்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறையையும் கூட டிரம்ப் நீக்க வேண்டும் என்றார்.
Posted by: 

English summary
Jenna Talackova, who advanced to the finals of the Miss Canada competition, part of the Miss Universe contest, who was recently forced out of the competition, shows her passport that lists her gender as female, at a news conference in Los Angeles on Tuesday. Talackova says she just wants Trump to say if she can compete and if she wins in Canada she’ll be allowed to go on the Miss Universe pageant. The 23-year-old Vancouver woman, who had gender-reassignment surgery when she was 19, says she doesn’t want any other woman to suffer the discrimination that she has had to endure through this process.